சினிமா

பதவி கொடுக்காத விஜய்.. அதிருப்தியில் தாடி பாலாஜி? அவரது பதிவால் சர்ச்சை

Published

on

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

பகுதி வாரியாக கட்சியின் முக்கிய பொறுப்புகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிரபல youtube பேச்சாளர் ராஜ்மோகன் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் சமீபத்தில் கட்சியில் சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

விஜய் கட்சி அறிவித்ததில் இருந்தே நடிகர் தாடி பாலாஜி கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் விஜய் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருந்தார்.

தற்போது தவெக-வில் முக்கிய பதவிகள் யாருக்கு என்கிற அறிவிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஆனால் தாடி பாலாஜிக்கு இதுவரை எந்த பதவியும் தரப்படவில்லை.

இந்நிலையில் புதிதாக வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி கொடுத்ததை விமர்சித்து ஒரு மீம் தனது வாட்சப் ஸ்டேட்ஸில் பதிவிட்டு இருக்கிறார் தாடி பாலாஜி.

அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Exit mobile version