சினிமா
தமிழ் என வாய்தவறி சொன்ன வார்த்தை.. பூஜா ஹெக்டேவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். தற்போது விஜய் ஜோடியாக அவர் ஜனநாயகன் படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பூஜா ஹெக்டே சொன்ன ஒரு வார்த்தையால் நெட்டிசன்கள் அவர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
“அலா வைகுந்தபுரம்லோ தமிழ் படம்” என பேட்டியில் தவறுதலாக கூறிவிட்டார். அவர் நடித்தது தமிழா, தெலுங்கா என்று கூட தெரியவில்லையே என தெலுங்கு ரசிகர்கள் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
அந்த படத்தின் புட்ட பொம்மா பாடலில் பூஜா ஹெக்டே ஆடிய டான்ஸ் பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.