சினிமா
வில்லன் நடிகர் திடீர் மரணம்.. காரணம் என்ன! அதிர்ச்சியில் திரையுலகம்..
திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜு என்கிற ராஜ்குமார்.
இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பைரவ தீபம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த விஜய ரங்கராஜுவிற்கு வியட்நாம் காலனி எனும் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் மலையாளத்திலும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்துள்ள இவர், சமீபத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் நடந்த விபத்த்தில் காயமடைந்துள்ளார்.
இதன்பின் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜய ரங்கராஜும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 70.
நடிகர் விஜய ரங்கராஜுவிற்கு தீக்ஷிதா மற்றும் பத்மினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இவருடைய மரணம் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.