சினிமா

இப்போது எனக்கு அது மிகவும் உதவுகிறது.. மனம் திறந்த ரஜினிகாந்த்

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வர, அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தை முடித்தபின் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த வேட்டையன் படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக கூலி கண்டிப்பாக தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் தன் பள்ளிகால நினைவுகள் குறித்து பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “நான் பார்த்த படங்களை பள்ளியில் என் நண்பர்கள் முன்பு நடித்து காட்டுவேன்.

இந்த விஷயம் என் ஆசிரியர்களுக்கு தெரிய வர பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் நாடக போட்டிகளில் நடிக்க வைப்பார்கள். அப்படி நடிக்கும் போது எனக்கு சிறந்த நடிப்பிற்காக விருது எல்லாம் கிடைத்துள்ளது. அது இப்போது எனக்கு மிகவும் உதவுகிறது” என்று கூறியுள்ளார்.

Exit mobile version