இந்தியா

விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு தான்.., பரந்தூரில் விஜய் ஆவேச பேச்சு

Published

on

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக மாவட்டமான காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால், பசுமை விமான நிலையம் அமைக்கவுள்ள இடத்தைச் சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில், பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திப்பதற்கு அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் பின்னர் பேசுகையில், “உங்களுடைய போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு நான் இங்கு வந்துள்ளேன்.

கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் பேசியதை கேட்டவுடன் ஏதோ செய்தது. இந்த விடயத்தில் என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு.

நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்.

வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானவன் நான் அல்ல. இந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இதை நான் சொல்லவில்லை என்றால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதையை கட்டுவார்கள்.

நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாடை தான் இங்கு எடுக்க வேண்டும்” என்றார்.

Exit mobile version