சினிமா

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 போட்டியாளர்கள்… விவரம் இதோ

Published

on

கடந்த 100 நாட்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் பிக்பாஸ்.

விஜய் சேதுபதி முதன்முறையாக பிக்பாஸை தொகுத்து வழங்கினார், எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் நிறைய சின்னத்திரை கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

ஒருவழியாக 100 நாட்களை தாண்டி ஓடிய பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு முடிவுக்கு வந்துவிட்டது. முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வாகி பரிசையும் தட்டிச்சென்றுவிட்டார்.

இந்த பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கியவர்களின் விவரத்தை காண்போம்.

ரஞ்சித்- ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் என 77 நாட்களுக்கு ரூ. 38 லட்சத்து ரூ. 50 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

தீபக்- ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் என 99 நாட்களுக்கு ரூ. 29 லட்சத்து ரூ. 70 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

ஜாக்குலின்- ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் என 101 நாட்களுக்கு ரூ. 25 லட்சத்து ரூ. 25 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

பவித்ரா- ஒரு எபிசோடுக்கு ரூ. 20 ஆயிரம் என 105 நாட்களுக்கு ரூ. 21 லட்சம் சம்பளம் இருக்கிறார்.

அன்ஷிதா- 84 நாட்களுக்கு ரூ. 21 லட்சம் வாங்கி இருக்கிறார்.

அருண் பிரசாத்- ஒரு எபிசோடுக்கு ரூ. 20 ஆயிரம் என 98 நாட்களுக்கு ரூ. 19 லட்சத்து 60 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

விஷால்- 105 நாட்களுக்கு ரூ. 15 லட்சத்து 75 ஆயிரம்

ஆனந்தி- 63 நாட்களுக்கு ரூ. 15 லட்சத்து 75 ஆயிரம் வாங்கி உள்ளார்.

சத்யா- 70 நாட்களுக்கு ரூ. 14 லட்சம் பெற்றுள்ளார்.

சௌந்தர்யா- ஒரு எபிசோடுக்கு ரூ. 12 ஆயிரம் என மொத்தமாக 105 நாட்களுக்கு ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

Exit mobile version