சினிமா
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை நான் பண்ணல.. இயக்குநர் கவுதம் மேனன் கூறிய ஷாக்கிங் தகவல்
இயக்குநர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இயக்குநராக மட்டுமின்றி தற்போது பிஸியான நடிகராகவும் இருக்கிறார்.Latest Tamil movies
இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் Dominic and the Ladies’ Purse. மம்மூட்டி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 23ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனில் இருக்கும் கவுதம் மேனன், பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.Latest Tamil movies
இதில் ஒரு பேட்டியில், இயக்குநர் கவுதம் மேனனிடம் அவருடைய இயக்கத்தில் உருவான என்ன நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது தொகுப்பாளர் கேள்வியை முடிப்பதற்குலேயே, “நான் மறந்துவிட்டேன், என்ன படத்தை பற்றி கூறுக்குறீர்கள். என்ன படம் அது. எனக்கு அப்படத்திலிருந்து ஒரு பாடல் மட்டும் நினைவில் இருக்கிறது. நான் அந்த படத்தை பண்ணவில்லை, வேறு யாரோ பண்ணிருக்காங்க” என கவுதம் மேனன் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.