சினிமா

சூர்யாவுடன் கங்குவா படத்தில் நடித்த நடிகை திஷா பதானிக்கு அடித்த ஜாக்பாட்…

Published

on

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கங்குவா.

பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் திஷா பதானி.

ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம். ஆனால் கங்குவா படம் சரியாக போகாததால் திஷா பதானிக்கு தமிழ் சினிமா அறிமுகமும் சரியாக அமையவில்லை.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் நடிகர் டைரஸ் கிப்சன் மற்றும் நடிகர் ஹாரி குட்வின்ஸுடன் திஷா பதானி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் ஹாலிவுட் வெப் தொடர் ஒன்றில் திஷா பதானி நடித்து வருவதாக தெரிகிறது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவருக்கு முன் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.

Exit mobile version