சினிமா

விடாமுயற்சி படத்தின் OTT விற்பனை விலை எவ்வளவு தெரியுமா.. மாஸ் காட்டும் அஜித்

Published

on

விடாமுயற்சி படத்தின் OTT விற்பனை விலை எவ்வளவு தெரியுமா.. மாஸ் காட்டும் அஜித்

அஜித்தின் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெறித்தனமாக அமைந்திருந்த இந்த ட்ரைலர், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் OTT உரிமை விற்பனை விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 75 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version