சினிமா

மாஸ் வெற்றிப்பெற்ற மதகஜராஜா… தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியிட்ட விஷால்

Published

on

மாஸ் வெற்றிப்பெற்ற மதகஜராஜா… தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியிட்ட விஷால்

நடிகர் விஷால் பல வருடங்களுக்கு முன்பு மதகஜராஜா என்ற படத்தில் நடித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இப்படம் பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கிற்கு வந்துள்ளது, படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நிறைய புதுப்படங்கள் களமிறங்கியுள்ள நிலையில் விஷாலின் மதகஜராஜா மாஸ் வரவேற்பு பெற்று வருகிறது.

படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் வெற்றிவிழா கொண்டாடியுள்ளார்கள்.

அப்போது நடிகர் விஷால் பேசும்போது தான் அடுத்தடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளேன் என்பதை கூறியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், துப்பறிவாளன் 2 மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கத்திலும் நடிக்க உள்ளாராம்.

Exit mobile version