சினிமா
கில்லி படத்தில் த்ரிஷா ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? எந்த நடிகை தெரியுமா
விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் ஜெமினி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து, விஜய்யின் திருமலை படத்தில் ‘வாடியம்மா சக்கம்மா’ பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இடையில் சில காலம் காணாமல் போன இவர் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஆம்பள திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான முத்தின கத்திரிக்காய் படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்திலும் தோன்றி இருந்தார்.
இந்நிலையில், கிரண் முன்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், விஜய் மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற கில்லி படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நான் தான் முதலில் நடித்திருக்க வேண்டியது.
ஆனால் சில காரணத்தினால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நான் கில்லி படத்தில் நடித்திருந்தால் நல்ல ரீச் கிடைத்திருக்கும்” என்று கூறியுள்ளார்.