சினிமா
அதை இன்று வரை கழட்டவில்லை.. தன் காதல் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
அதை இன்று வரை கழட்டவில்லை.. தன் காதல் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் 2015ம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி தற்போது ஹிந்தி சினிமாவில் கால் பதித்துள்ளார்.
அவர் நடித்த பேபி ஜான் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை.
தமிழ், தெலுங்கு என நடித்து வந்த கீர்த்தி, மகாநதி படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருதை பெற்றார். சமீபத்தில், தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கீர்த்தி அவருடைய காதல் கதை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ” ஆர்குட் என்ற சமூக வலைத்தளம் மூலம் முதன் முதலில் பேச ஆரம்பித்தோம்.
அதன் பின், தொடர்ந்து பேச தொடங்கினோம். ஒரு நாள் அவரிடம் தைரியம் இருந்தால் என்னிடம் புரபோஸ் செய்யுமாறு கூறிவிட்டேன். கடந்த 2010-ம் ஆண்டு முதன்முறையாக அவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார்.
அவர் அன்று எனக்கு கொடுத்த மோந்திரத்தை நான் இன்றுவரை கழட்டவில்லை. அது என்னுடைய திருமணத்திலும் இருந்தது. அந்த மோந்திரத்தை நீங்கள் என்னுடைய அனைத்து படங்களிலும் காண முடியும்” என்று கூறியுள்ளார்.