சினிமா
அசுரனுக்கு முன் அஜித்துடன் நடிக்கவிருந்த மஞ்சு வாரியர்.. எந்த படத்தில் தெரியுமா
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தை தாண்டி தமிழில் அதிக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இதில், அவர் ஒரு பாடலுக்கு ஆடிய நடனம் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது.
இதை தொடர்ந்து, ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், அசுரன் படத்திற்கு முன் மஞ்சு வாரியர் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆம், அசுரன் படத்திற்கு முன் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கவிருந்தாராம்.
ஆனால், சில காரணத்தினால் அவரால் நடிக்க முடியவில்லையாம். பின், வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்ததாக இயக்குனர் ராஜீவ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.