சினிமா

ஸ்டார் படத்திற்கு கவின் வாங்கிய சம்பளம்

Published

on

ஸ்டார் படத்திற்கு கவின் வாங்கிய சம்பளம்

நடிகர் கவின் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார்.

அதன் பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆன அவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார்.

இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படம் கவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோரும் கவின் நடிப்பை தான் பாராட்டி வருகின்றனர் இந்த படத்திற்காக கவின் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இதற்கு முன் 35 முதல் 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிய அவர் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார். ஒரு நடிகரின் மார்க்கெட் தான் சம்பளத்தை நிர்ணயிக்கிறது என கவின் இதுபற்றி கூறி இருக்கிறார்.

Exit mobile version