சினிமா

மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்ல விமான நிலையம் வந்த விஜய்

Published

on

மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்ல விமான நிலையம் வந்த விஜய்

நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் படப்பிடிப்புகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

ரஷ்யா, கேரளா, சென்னை என பல இடங்களில் மாறி மாறி படப்பிடிப்புகள் நடக்கின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்திற்கு முதல் சிங்கிள் வெளியாக ரசிகர்களும் கொண்டாடினார்கள், அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏதாவது அப்டேட் வருமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் நிறைய வீடியோக்கள் வெளியாகி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக விஜய்யின லேட்டஸ்ட் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கோட் படப்பிடிப்பிற்கு செல்ல விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் விஜய்யை கண்ட ரசிகர்கள் விஜய் அண்ணா, விஜய் அண்ணா என கூச்சலிடுகின்றனர்.

Exit mobile version