சினிமா

சூர்யாவை திருமணம் செய்ய காரணத்தை கூறிய ஜோதிகா

Published

on

சூர்யாவை திருமணம் செய்ய காரணத்தை கூறிய ஜோதிகா

அனைவருக்கும் பிடித்த நட்சத்திர ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி தற்போது இரு பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

இருவருமே தங்களுடைய நடிப்பில் பிசியாக இருக்கிறார். ஜோதிகா பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் கங்குவா திரைப்படம் குறித்தும், சூர்யாவை திருமணம் செய்ய காரணம் பற்றியும் ஜோதிகா சமீபத்தில் பேசியுள்ளார்.

“சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படத்தின் சில காட்சிகளை நான் பார்த்தேன். கண்டிப்பாக பெரிய ஆச்சிரியத்தை இப்படம் மூலம் ரசிகர்கள் பார்க்கவிருக்கிறார்கள். சூர்யா ஒரு அற்புதமான மனிதர், கங்குவா திரைப்படத்திற்காக அவர் 200% சதவீதம் உழைப்பை கொடுத்துள்ளார்.

நான் அவரை திருமணம் செய்துகொண்டதற்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறன். சினிமா மட்டுமில்லாமல், கணவராகவும், இரு பிள்ளைகளின் தந்தையாகவும், அனைத்திலும் அவர் 200% சதவீதம் ஈடுபாட்டை காட்டக்கூடியவர் ஆவார். இப்படத்திற்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பை என்னால் விவரிக்க வார்த்தைகளே இல்லை” என நடிகை ஜோதிகா பேசினார்.

Exit mobile version