சினிமா
பிதாமகன் பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் திடீர் மரணம்
பிதாமகன் பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் திடீர் மரணம்
பிதாமகன், உன்னை நினைத்து போன்ற பல படங்களில் நடித்து இருந்தவர் காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ். அவர் தமிழ், தெலுங்கு என மொத்தம் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறாராம்.
குழந்தை நட்சத்திரம், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார் விஸ்வேஷ்வர ராவ்.
தற்போது 62 வயதாகும் அவர் சென்னை சிறுசேரி பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை விஸ்வேஷ்வர ராவ் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
அவரது உடல் சினிமா துறையினர் அஞ்சலிக்காக சிறுசேரியில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.