சினிமா
விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் உறுதியானாரா?
விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் உறுதியானாரா?
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக தனது படங்கள் மூலம் வசூல் ராஜ்ஜியம் செய்து வருபவர் விஜய்.
தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா ஏரியாக்களிலும் விஜய் கில்லி தான், எல்லா இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தும்.
தற்போது விஜய் அரசியலில் களமிறங்க இருப்பதால் அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்துவதாக கூறியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தது.
ஆனால் அவர் அரசியலில் ஈடுபட இருப்பதால் மக்களும் ஹேப்பி தான். இப்போது வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது.
இன்னும் கோட் படமே முடியவில்லை, அதற்குள் விஜய்யின் 69வது படத்தின் இயக்குனர் யார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் நிறைய பேசப்படுகிறது.
ஆனால் விஜய்யை கடைசியாக இயக்கப்போவது யார் என்பது இன்னும் சஸ்பென்ஸாக இருந்துவந்த நிலையில் எச் வினோத் உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.