சினிமா

சினிமாவில் இருந்து திடீரென விலகியது ஏன்? நடிகை சுகன்யா

Published

on

சினிமாவில் இருந்து திடீரென விலகியது ஏன்? நடிகை சுகன்யா

தமிழில் 1991ம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா.

இதனைத் தொடர்ந்து இவர் சின்ன கவுண்டர், கோட்டை வாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், மகாநதி, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார், இவருக்கு நடிப்பை தாண்டி பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் கொண்டவர். சின்னத்திரை பக்கமும் வந்தவர், தொகுப்பாளினியாகவும் கலக்கி வந்தார்.

பிஸியாக நடித்துக்கொண்டு வந்தவர் 2002ம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்காவில் திருமணம் பின்பு செட்டில் ஆனவருக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் ஒரே ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

திடீரென தான் சினிமாவில் இருந்து விலகியது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகை சுகன்யா. அதில் அவர், மலையாளத்தில் கானாகீனா படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

ஆனா அத பத்தி யாரும் பேசல, படங்களில் நடிக்க நான் தயாரா இருந்தேன், ஆனா யாரும் என்னை அழைக்கவில்லை. நானாக சினிமாவில் இருந்து விலகவில்லை என சுகன்யா பேசியுள்ளார்.

Exit mobile version