சினிமா

ஒரு வீடியோ குவாலிட்டியா எடுக்க தெரியாதா? விஜய்க்கு குவியும் கண்டனங்கள்..!

Published

on

ஒரு வீடியோ குவாலிட்டியா எடுக்க தெரியாதா? விஜய்க்கு குவியும் கண்டனங்கள்..!

தளபதி விஜய் நேற்று ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியில் இணைவதற்கான செயலியை அறிமுகம் செய்தார் என்பதும் இந்த செயலியின் சர்வர் முடங்கும் அளவுக்கு ஏராளமானோர் முதல் நாளிலேயே கட்சியில் உறுப்பினராக சேர்ந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஒரே நாளில் இவ்வளவு உறுப்பினராக எண்ணிக்கை நடந்ததாக வரலாறு இல்லை என்றும் அந்த அளவுக்கு தமிழக மக்களின் மனதில் விஜய் இடம் பிடித்துள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

விஜய் தனது தமிழக வெற்றிக் கழக செயலியை அறிமுகம் செய்த ஒரு சில மணி நேரத்திலேயே 25 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்து விட்டதாகவும் ஏராளமானோர் மணிக்கணக்கில் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பதிவு செய்ய முடியவில்லை சர்வர் டவுன் ஆக இருக்கிறது என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அனேகமாக தற்போது ஒரு கோடி உறுப்பினர் சேர்ந்து இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து தான் சிலர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வருகின்றனர். விஜய் தனது செயலியை அறிமுகப்படுத்தும் வீடியோவை இன்னும் கொஞ்சம் குவாலிட்டியாக எடுத்து இருக்கலாம் என்றும் ஆடியோவும் சரியாக கேட்கவில்லை என்றும் ஒரு அரசியல் கட்சி தொடங்கும் விஜய் இதை கவனிக்கவில்லையா? என்றும் கூறி வருகின்றனர்.

அந்த வீடியோவில் விஜய் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக கேட்கவில்லை என்றும் வீடியோ மற்றும் ஆடியோ குவாலிட்டியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்பட ஒரு சில மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் அவர்களும் தங்கள் கட்சியில் இணையும் வகையில் இந்த வீடியோவில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் போட்டு இருக்கலாம் என்றும் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த விமர்சனம் உண்மைதான் என்ற நிலையில் அடுத்தடுத்த வீடியோக்களில் இந்த குறையை விஜய் சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தனது கட்சியின் பெயரில் ‘க்’ இல்லை என்று சுட்டிக்காட்டியபோது அதை விஜய் ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும் விஜய்யின் அரசியல் கட்சிக்கு முதல் நாளே இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது என்பது தமிழக அரசியல் கட்சியின் வயிற்றில் புளியை கரைத்து உள்ளது என்பது மட்டும் உறுதி ஆகிறது.

Exit mobile version