சினிமா

கூவத்தூர் விவகாரத்தில் திடீரென அமைதியாகிவிட்ட த்ரிஷா

Published

on

கூவத்தூர் விவகாரத்தில் திடீரென அமைதியாகிவிட்ட த்ரிஷா

கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார் என்பதும் இதனை அடுத்து த்ரிஷா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் நஷ்ட ஈடு தர வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் இன்னும் ஏவி ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்பதும் இதனை அடுத்து த்ரிஷா சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே மணிரத்னம் உள்பட த்ரிஷா படங்களை இயக்கும் மற்றும் தயாரிக்கும் சிலர், இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் உங்களை நம்பி கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்திருக்கிறோம் என்றும் எங்கள் படத்திற்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானது.

அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவருடன் த்ரிஷா நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் தான் த்ரிஷாவுக்கு அட்வைஸ் கூறி இருப்பதாகவும் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம், பெரிதுபடுத்தினால் வேறு சில விஷயங்களை கிளறுவார்கள் என்று அறிவுரை கூறியதாகவும் இதனை அடுத்து த்ரிஷா அமைதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால்தான் த்ரிஷா, ஏவி ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றும் ஆனால் அதே நேரத்தில் திரை உலக பிரபலங்கள் மூலம் அவருக்கு அழுத்தம் கொடுத்து இனிமேல் அவ்வாறு பேசாமல் இருக்குமாறு சொல்ல ஏற்பாடு நடக்கும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version