சினிமா

அஜித்தை தனது அரசியல் வாரிசாக்க முயற்சி செய்த முன்னாள் தமிழக முதல்வர்

Published

on

அஜித்தை தனது அரசியல் வாரிசாக்க முயற்சி செய்த முன்னாள் தமிழக முதல்வர்

விஜய் தற்போது சினிமாவில் இருந்து அரசியலுக்கு நகர்ந்துவிட்டார். தன்னுடைய சினிமா கமிட்மெண்ட்ஸ் முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். மேலும் 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளனர்.

விஜய்யின் அரசியல் வருகை ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் அரசியல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நமது சினிஉலகத்திற்கு பேட்டி அளித்த பிரபல பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் இதைப்பற்றி பேசியுள்ளார்.

இதில் ‘ஜெயலலிதா அவர்களுக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும். அஜித்தை எப்படியாவது அரசியலுக்கு வரவழைக்க வேண்டும் என தீவிராக இருந்தார் ஜெயலலிதா. தனக்கு பின் தன்னுடைய இடத்தில் அஜித் தான் இருக்க வேண்டும் என்று தான் ஜெயலலிதாவின் ஆசையாக இருந்தது. ஆனால், அது நடக்காமல் போய்விட்டது’.

ஜெயலலிதா எப்படி அஜித் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளாரோ, அதே போல் அஜித்திற்கு ஜெயலலிதா மீது மிகப்பெரிய அன்பு இருக்கிறது. ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்டு வெளிநாட்டில் இருந்த அஜித் இரண்டு Chartered விமானத்தை பிடித்து இங்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்’.

‘ஒருவேளை ஜெயலலிதா ஆசைப்பட்டது போல் அன்றே அஜித் அரசியலுக்கு வந்திருந்தால், இன்று அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய்யை விட அஜித்திற்கு பிரகாசமான அரசியல் கிடைத்திருக்கும்’ என கூறியுள்ளார்.

Exit mobile version