சினிமா

95 நாட்கள்.. பிக்பாஸ் 7 பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் இவர்தான்!!

Published

on

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 94 நாட்களை கடந்த இந்நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் நிக்‌ஷன் மற்றும் ரவீனா வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தினேஷ், விஷ்ணு, மணி, மாயா, பூர்ணிமா, விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து பிக்பாஸ், பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம், குறையலாம் என்று கூறியிருந்தார்.

பணப்பெட்டியை யார் எடுப்பார் என்று போட்டியாளர்கள் ஆளுக்கொரு பெயரை அடுக்கி வந்தனர். இன்றைய பிரமோ வீடியோவில் 12 லட்சம் மதிப்பில் பணப்பெட்டி காட்டப்பட்டது.

ஆனால், இந்த பெட்டியை எடுக்க போட்டியாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருசிலர் இணையத்தில் விசித்ரா பணப்பெட்டி எடுப்பார் என்றும் மறுபக்கம் மணி எடுப்பார்? அவர் எடுக்கவில்லை என்றால் பூர்ணிமா எடுப்பார் என்றும் கூறி வருகிறார்கள்.

தற்பொழுது வந்த தகவலின் படி பூர்ணிமா 16 லட்சம் மதிப்புள்ள பணபெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாராம்.

Exit mobile version