சினிமா
ரூ. 13 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியது இந்த பிக்பாஸ் பிரபலமா?
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டு நிகழ்ச்சி 90 நாட்களை கடந்துவிட்டது.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
தற்போது பிக்பாஸ் 7 வீட்டில் நாம் அனைவரும் எதிர்ப்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது.
ரூ. 9 லட்சம், ரூ. 13 லட்சம் இப்போது ரூ. 15 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த பணப்பெட்டியை விஜய் வர்மா, தினேஷ், மணி, பூர்ணிமா இவர்களில் யாராவது ஒருவர் தான் பணப்பெட்டியுடன் வெளியேறுவார் என ரசிகர்கள் அவர்களுக்கு தோன்றிய போட்டியாளரை போட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விசித்ரா ஒரு சூப்பரான சம்பவம் செய்துவிட்டார் என்கின்றனர். அதாவது நேற்று இரவு 10.45 மணிக்கு விசித்ரா ரூ. 13 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.