சினிமா

விஷ்ணுவை நேரடியாக தாக்கிய பூர்ணிமா!

Published

on

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 இல் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் போட்டியாளர்களிடையேயும் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் உற்சாக மனநிலையையும் சேர்ந்தே ஏற்படுத்தியுள்ளது. சக போட்டியாளர்களின் நடவடிக்கை குறித்து பேசிய ஹவுஸ்மேட்ஸ், அவர்களின் மோசமான நடவடிக்கைகள் குறித்து எடுத்து பேசினர். இதில் விஷ்ணு தன்னை கசக்கி பிழிந்து தூக்கி எறிந்துவிட்டதாக பூர்ணிமா குற்றம் சாட்டினர். அவரும் பதிலுக்கு குற்றம் சாட்டிய நிலையில், இடையில் வந்த மாயாவிற்கும் விஷ்ணுவிற்கும் முட்டிக் கொண்டது. வழக்கம்போல அவர்கள் உபயோகித்த வார்த்தைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தனது.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றிக் கொள்ளப் போகும் போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பைனல் உள்ளிட்ட அதிரடி டாஸ்க்குகள் அடுத்தடுத்து நடந்த நிலையில் அதில் வெறித்தனமாக விளையாடி போட்டியாளர்கள் ரசிகர்களை கவர்ந்தனர்.

தற்போது நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் உள்ள நிலையில் யார் இந்த பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு யாராவது வெளியேறுங்கள் என்று விசித்ரா கூறுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்த சீசனில் அப்படி யாரும் செய்ய மாட்டார்கள் என்று அவருக்கு தினேஷ் பதிலடி கொடுப்பதாகவும் காணப்படுகிறது. தொடர்ந்து தற்போது சக ஹவுஸ்மேட்சின் பிக்பாஸ் பயணத்தை ஒவ்வொருவரும் பேச வேண்டும் என்று டாஸ்கில் கூறப்பட்டது. இதையடுத்து பேசிய பூர்ணிமா, விஷ்ணு என்ன வேண்டுமானாலும் செய்து ஒரு விஷயத்தை அடைய முயற்சிப்பார் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து தன்னை அதிகமாக பயன்படுத்தி கசக்கி தூக்கிப் போட்டு விட்டதாகவும் பூர்ணிமா கூறினார். இதனால் கடுப்பான விஷ்ணு, எல்லாரையும் யூஸ் செய்துவிட்டு தூக்கிப் போட்டது பூர்ணிமாதான் என்று பதிலடி கொடுத்தார். தொடர்ந்து இடையில் பேசிய மாயா, பாயிண்ட்சை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய நிலையில், உன்கிட்ட எல்லாம் என்ன பாயிண்ட்ஸ், நீ ஒரு ஜீரோ என்று விஷ்ணு கூறுவதாக அமைந்துள்ளது. மாற்றி மாற்றி பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் ஏற்பட்டுவரும் நிலையில், இன்னும் சில தினங்களில் இவர்களின் சண்டைகள் ஓயவுள்ளது.

Exit mobile version