சினிமா

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காதல் ஜோடி.. அடடா.. இனி ரொமான்சுக்கு பஞ்சமே இருக்காது!

Published

on

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காதல் ஜோடி.. அடடா.. இனி ரொமான்சுக்கு பஞ்சமே இருக்காது!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகமாகி உள்ள நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கலந்து கொள்ள உள்ள 18 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். வழக்கமாக ஒரே வீட்டில் நடந்து இந்த நிகழ்ச்சியில், இந்த முறை இரண்டு வீடு, ஒரு வாசல், ஒரே ஒரு சமையல் அறை மட்டுமே உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப், நிவிஷா, நிக்சன், மணி சந்திரா, அக்‌ஷ்யா, ஜோவிகா விஜயகுமார், ஆக்‌ஷயா, விஷ்ணு, விசித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன், அனன்யா ராவ், விஜய் வர்மா, பாவா செல்லத்துரை, யுகேந்திரன் என 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காதல் ஜோடி: இதில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள மணி சந்திராவுக்கும் ரவீணாவுக்கும் இடையே ஏற்கெனவே நல்ல பழக்கம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே சோஷியல் மீடியாவில் பேச்சு அடிப்பட்டுள்ள நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இதில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ள ரவீணா, மணிசந்திரா உள்ளே நுழைந்தவுடன் குடுகுடுவென ஓடி வந்து அவரை கட்டி அணைந்து வரவேற்றார். இது நிகழ்ச்சியைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சரியாக நோட் பண்ணி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காதல் ஜோடி என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சீசனில் அசல் கோளாரு நிவாஷி பின்னால் சுற்றிக் கொண்டே இருந்தார். அதே போல ரச்சித்தா பின்னால் ராபர் மாஸ்டர் சுற்றி இருந்தார். இதனால் இணையவாசிகள் இது என் பிக் பாஸ் வீடா.. இல்ல லவ்வர்ஸ் பார்க்கா என கமெண்டுகளை தெறிக்கவிட்டு இருந்தனர். ஆனால், இந்த முறை ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் தான் 40வயதிற்கு மேற்பட்டவராக இருக்கிறார்கள் மற்ற அனைவரும் 20 முதல் 25 வயது உடையவர்களாக இருப்பதால், காதல், கசமுசா ஆகியவற்றுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இருக்காது என்றும் அடுத்த 100 நாட்களுக்கு கண்டெண்ட் கன்பார்ம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version