சினிமா
2000 நடன கலைஞர்களுடன் களமிறங்கும் தளபதி – லோகேஷின் மாஸ் பிளான்
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் அறிமுக பாடலில் 2000 நடன கலைஞர்களுடன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் அறிமுக பாடலில் 500 நடன கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் ‘லியோ’ படத்தின் விஜய் அறிமுக பாடலில் 2000 நடன கலைஞர்களை பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் ஒவ்வொரு படத்திலும் அவரது அறிமுக பாடல் என்பது மாஸாக இருக்கும் என்பதும் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அறிமுக பாடலை பெரும்பாலும் அவரே பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் விஜய்யின் அறிமுக பாடல் அனிருத் இசையில் உருவாக்கப்பட்டால் அது வேற லெவலில் இருக்கும் என்பதை இதற்கு முந்தைய படங்களில் பார்த்துள்ளோம்.
அந்த வகையில் ‘லியோ’ படத்திற்காக அனிருத் அட்டகாசமாக விஜய்க்காக ஒரு அறிமுக பாடலை கம்போஸ் செய்துள்ளதாகவும் இந்த பாடலில் 2000 நடன கலைஞர்களுடன் விஜய் நடனமாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து ‘லியோ’ படத்தின் விஜய் அறிமுகப்பாடல் திரையில் தோன்றும் போது விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்யவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
You must be logged in to post a comment Login