சினிமா
ஒஸ்கார் விருதுகள் அறிவிப்பு

ஒஸ்கார் விருது விழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த விழா அமெரிக்காவின் ஹொலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்த விருதுக்கான பரிசீலனைக்கு இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள “நாட்டு நாட்டு´ பாடல் மூலப்பாடல் வகையிலும், ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆகியவை குறும்படங்கள் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது ”ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்” திரைப்படம்.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருதை வென்றது ”ப்ளாக் பான்தர் : வகாண்டா ஃபாரெவர்”
சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான ஒஸ்கார் விருதை வென்றது “ தி வேல்” திறைப்படம்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” படத்திற்காக பெற்றார் கே ஹுய் குவான்.
சிறந்த ஒளிப்பதிவுக்கான ஒஸ்கார் விருதை வென்றது ’ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்’ திரைப்படம்.
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை வென்றது ’அன் ஐரிஷ் குட்பை’
சிறந்த துணை நடிகைக்கான ஒஸ்கார் விருதை ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக வென்றார் ஜேமி லீ கர்டிஸ்
சிறந்த ஆவணப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது ’நவால்னி’
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’ பெற்றுள்ளது.
#cinema
You must be logged in to post a comment Login