சமையல் குறிப்புகள்
பட்டர் காபி
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 1 கப்
பால் – 1 கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
காபி தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செய்முறை
* தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த தண்ணீரில் காபித்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பின்னர் அதில் நன்றாக கொதிக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.
* அடுத்து உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அல்லது மிக்சியில் போட்டு இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் கலக்க வேண்டும்.
* காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் வரும் போது எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.
அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம். பால் விரும்பாதவர்கள் பால் சேர்க்காமலும் செய்யலாம்.
You must be logged in to post a comment Login