vikatan 2020 09 9a098bc1 057c 44c8 9925 dfde17dde293 158542 thumb
சினிமாபொழுதுபோக்கு

விஜய்க்காக களத்தில் இறங்குவேன்! – சீமான் அதிரடி

Share

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் பண்டிகை நாட்களில் தமிழ் படங்கள் ஆந்திராவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் சென்னை திருவொற்றியூரில் பேட்டியளித்தார். அதில், “ஆந்திராவில் ‘வாரிசு’ வெளியாகாவிட்டால் விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன்” என்று பேசினார்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 15
சினிமா

சூரி கூட நடிக்க OKவா-னு கேக்குறாங்க.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா...

15 16
சினிமா

44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோன்.. அவருடைய சொத்து மதிப்பு

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த...

12 16
சினிமா

விஜய், அஜித்துக்கு நோ சொன்ன நடிகை சாய் பல்லவி.. காரணம்

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே...

13 15
சினிமா

ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா.. ரொமான்ஸ் வேற லெவலில் இருக்குமே

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள்...