சினிமா
விரைவில் டும் டும்… – உறுதிப்படுத்திய ஹன்சிகா


தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
கடந்த 2020-ல் ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள். அப்போது இருவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சோகேலும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஹன்சிகாவிடம் சோகேல் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பூங்கொத்து கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் புகைப்படங்களை ஹன்சிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த தம்பதியினருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 04-ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.