Connect with us

சமையல் குறிப்புகள்

மண்மணக்கும் கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி ?

Published

on

Untitled 39

கருவாட்டுக் குழம்புகளில் நெத்திலி கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. நெத்திலி கருவாடு – 200 கிராம்
  2. கத்தரிக்காய் – 1/4 கிலோ
  3. முருங்கைக்காய் – 2
  4. பச்சை மிளகாய் – 2
  5. தக்காளி – 2 (நறுக்கியது)
  6. புளி – 1 எலுமிச்சை அளவு
  7. வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
  8. கடுகு – 1/2 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை – சிறிது
  10. எண்ணெய் – தேவையான அளவு
  11. உப்பு – தேவையான அளவு
  12. சின்ன வெங்காயம் – 1 கையளவு
  13. மல்லித் தூள் – 50 கிராம்
  14. சீரகம் – 1/2 டீஸ்பூன்
  15. மிளகு – 1 டீஸ்பூன்
  16. வரமிளகாய் – 2 (காய்ந்த மிளகாய்)
  17. கறிவேப்பிலை – சிறிது
  18. பூண்டு – 4 பற்கள்
  19. துருவிய தேங்காய் – 1/4 கப்

செய்முறை

முதலில் கருவாட்டை வெந்நீரில் ஊறவைத்து சில நேரங்கள் கழித்து கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

புளியை ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, ஊறியதும் புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு மண்சட்டியை எடுத்து கொள்ளவும் அவற்றை அடுப்பில் வைத்து மண்சட்டியில் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் காய்ந்தமிளகாயை வறுத்து, பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், மல்லித் தூள், சீரகம், பூண்டு, மிளகு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கி ஆறியதும் அதனுடன் தேங்காவை சேர்த்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

அம்மியில் அரைத்தால் குழம்பு சுவையாகவும், மிகவும் வாசனையாகவும் இருக்கும்.

பின்பு மற்றொரு மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அவற்றில் கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

காய்கள் நன்றாக வெந்ததும் அவற்றில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விடவும்.

பின்பு கரைத்து வைத்துள்ள  புளிச்சாறை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். புளிசாறானது நன்கு கொதித்ததும், அதில் நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

சுவையான கிராமத்து நெத்திலி கருவாடு குழம்பு தயார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 23, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 8.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 22 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 6 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 6 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 6.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 20, புதன் கிழமை, சந்திரன் தனுசு...