சினிமா
விஜய்யை பார்க்க வந்த ரசிகர்களால் பரபரப்பு! பொலிசார் தடியடி


வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை, எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் பலர் விஜய்யை பார்க்க குவிந்ததால் போலீசார் தடியடி நடித்தியுள்ளனர். இதனால் ஆதங்கமடைந்த ரசிகர்கள், “நாங்க இதெல்லாம் யாருக்காக செய்கிறோம். எங்களுக்கு தளபதியே தேவையில்லை.
எங்களுக்கு விஜய்யை பார்க்க ஆசையாக உள்ளது. இந்த வாசல் முன்பு வந்து கை அசைத்தால் போதும். ரஜினி, சூர்யா வந்த போது ரசிகர்களை அனுமதித்தார்கள். தளபதி வந்தால் மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை” என்று பேசினர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.