அழகுக் குறிப்புகள்
நீளமான முடியை பராமரிக்க வேண்டுமா? சில எளிய குறிப்புகள் இதோ!


நீளமான முடி உள்ளவர்கள் அதனை கவனமாக பராமரிப்பது அவசியமானது ஆகும். இல்லாவிடின் இது முடி உதிர்வு போன்ற பல பிரச்சினைக்கு நம்மை தள்ளிவிடும்.
அந்தவகையில் நீளமான முடியை எப்படி இயற்கை முறையில் பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.
- இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக வாரி பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது.
- தலைமுடியை விரித்தவாறு தூங்கும்போது தலையணை மற்றும் மெத்தைகளில் முடி உராய்ந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
- வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதல் தடுக்கப்படும்.
- முடியின் வேர்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலையில் அவ்வப்போது எண்ணெய் பூசி மென்மையாக மசாஜ் செய்வது முக்கியம். குறைந்தது பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்ல பலன் தரும்.
- தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
- கூந்தலை உலர வைப்பதற்கு டிரையர் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.
- நீளமான முடியை சிக்கலின்றி வைத்திருப்பது பராமரிப்பு முறைகளில் முதன்மயானது. சிக்கெடுக்கும்போது முனைகளில் இருந்து தொடங்கி, படிப்படியாகவும், மெதுவாகவும் மேல்நோக்கிச் செல்லுங்கள்.
- ஈரமான கூந்தலை சீப்பு கொண்டு வாரி சிக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர், கைகளால் மெதுவாக நீவிவிட்டபடி சிக்கல்களை பிரிப்பது நல்லது.
#HairProblem