சினிமா
நானே வருவேன் ரிலீஸ் திகதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!


தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29ஆம் திகதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் குறித்து கலைப்புலி தாணு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இந்த படத்தில் அண்ணன் தம்பி என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்பது டீசரில் இருந்து தெரிய வந்தது.
இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.