சினிமா
நிச்சயதார்த்த விழாவில் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்..வைரல் புகைப்படம்!


தேவராட்டம் என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் காதல் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கௌதம் கார்த்திக்கின் நெருங்கிய நண்பரான கோபி என்பவரின் நிச்சயதார்த்த விழாவில் தான் இருவரும் இணைந்து கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.