Connect with us

சமையல் குறிப்புகள்

காரசாரமான கேரட் ஊறுகாய்! செய்வது எப்படி?

Published

on

Spicy Cilantro Carrot Pickles

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

இதில் ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவது இன்னும் நன்மையே தரும்

அந்தவகையில் தற்போது கேரட்டை வைத்து காரசாரமான ஊறுகாய் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

Spicy Cilantro Carrot Pickles

தேவையான பொருட்கள்:

  1. கேரட் – கால் கிலோ
  2. எலுமிச்சை பழம் – ஐந்து
  3. பச்சை மிளகாய் – பத்து
  4. பெருங்காயம் – அரை டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி
  6. கடுகு – ஒரு தேகரண்டி
  7. உப்பு – தேவைகேற்ப
  8. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும். சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.

Advertisement
Advertisement
-speaker-is-very-dissmm&sass=ft relative">

You may like n>