அழகுக் குறிப்புகள்
நரைமுடி வராமல் தடுக்க வேண்டுமா? சில எளிய வழிகள் இதோ
பொதுவாக வயதானவர்களுக்கு தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் இந்த காலத்தில் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும்.
இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும், ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
இதற்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில எளிய பொருட்களை வைத்து கூட தீர்வினை பெறமுடியும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
- கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு.
- கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப் பொடி, இஞ்சி, தேன் ஆகியவற்றை தினமும் ஒவ்வொன்றாக உணவில் சேர்த்து வரலாம்.
- சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் இளநரை மாறும். அதேபோல், முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
- ஷாம்பூவை பயன்படுத்தாமல் சிகைக்காயை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும். இதில் உள்ள இயற்கை பொருட்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து நரைமுடி வராமல் தடுக்கிறது.
- மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இரவு நேரத்தில் முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரை முடி மறைந்து நன்கு கரு கருவென மாறிவிடும்.
- நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
- இஞ்சியை பால் சேர்த்து அரைத்து, அதை நரை முடி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விட்டு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்து வர நரை முடி நீங்கும்.
- மிளகை தூளாக்கி அதை தயிரில் கலந்து தலைக்கு தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் சிகைக்காய் போட்டு குளித்தால் நரை முடி கருப்பாக மாறும்.
You must be logged in to post a comment Login