அழகுக் குறிப்புகள்
கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க! சருமத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குமாம்


பொதுவாக உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திற்குமான அருமருந்தாக கற்றாழை விளங்குகின்றது.
கற்றாழையை முகத்தில் தேய்ப்பதின் மூலம் பழைய தோல் நீங்கி புதிய பளபளப்பான தோல் கிடைக்கும். இதை நாம் வீட்டில் நேரம் கிடைக்கும் பொது பயன்படுத்தலாம்.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
- கருவளையங்களைப் போக்க நினைப்பவர்கள் தினமும் இரவு படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி தடவி, மறுநாள் காலையில் கழுவி வந்தால், விரைவில் கருவளையங்கள் மறையும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் இளமை தோற்றத்துடன் காணப்படும்.
- கற்றாழை ஜெல்லை கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் குறைந்துவிடும்.
- கற்றாழை ஜெல்லை தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
#BeautyTips #PimpleProblem