சினிமா
தி லெஜண்ட் திரைப்படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகுகின்றதா?


லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தி லெஜண்ட்.
இதில் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஜூலை 28 அன்று 2500- க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது.
மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதனால் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
#Thelegend #cinema