சினிமா
இரவின் நிழல் படம் பார்த்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?


பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்திற்காக பல பிரபலங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வரும் நிலையிர் நடிகர் ரஜினிகாந்த்தும் தனது பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ’இரவின் நிழல்’ திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழுப்படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கும் முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்., என்று கூறியுள்ளார்.
மேலும் பார்த்திபன் ரஜினி காந்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் தற்போது வைரலாக வருகிறது.
#Rajinikanth #Parthipan #IravinNizhal