அழகுக் குறிப்புகள்
முகத்தை பளிச் என்று வைத்து கொள்ள வேண்டுமா? அட்டகாசமான டிப்ஸ் இதோ!


பொதுவாக முகம் பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று. எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும்.
முகப்பருக்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பொலிவிழந்த முகம் போன்றவை பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள்.
அவற்றைத் தடுக்க முகத்தை பளிச் என்று வைத்து கொள்ள அற்புதமான வழிகள் இருக்கின்றன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.
- தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
- தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும்.
- தக்காளி சாருடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மை நிறம் வெளிப்படும்.
- பாதாம் பருப்பை நன்கு அரைத்து சிறிதளவு தேன்,எலுமிச்சை சாறு கலந்து தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.
#Skincare #Beautytips