சினிமா
விக்ரம் உடன் நடிக்கிறாரா ராஷ்மிகா மந்தனா? வெளியான சூப்பர் தகவல்


பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.
‘சியான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ‘சியான் 61’ படத்தின் கதாநாயகி கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் கிளாமர் அல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Vikram #RashmikaMandana