காணொலிகள்
இணையத்தில் வைரலாகும் கார்த்தியின் பொன்னியின் செல்வன் போஸ்டர்!
இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
தொடர்ச்சியாக இப்படத்தின் அறிவிப்புகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில், கார்த்தி, வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு கார்த்தியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், ராஜ்ஜியம் இல்லா இளவரசன், உளவாளி, துணிச்சலான வீரர்…இதோ வந்தியத்தேவன்! என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews