சினிமா
கமல்ஹாசனின் நடிப்பு குறித்து கருத்து சொல்ல தகுதியும் இல்லை! மகேஷ்பாபு


கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
இத்திரைப்படத்தை பார்த்து பல சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் இது குறித்து பிரபல நடிகரான மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
கமல்ஹாசனின் அவர்கள் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு எந்தவித தகுதியும் இல்லை. ஆனாலும் நான் சொல்லக்கூடிய ஒன்று என்னவெனில் உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு இது ஒரு பெருமையான தருணம், வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும் உங்களுடைய குழுவிற்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.
நடிகர் மகேஷ்பாபுவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#maheshbabu #kamalhasan #vikram