சினிமா
சினிமாவில் இருந்து விலகுகிறாரா நாசர்? வெளியான தகவல்
![சினிமாவில் இருந்து விலகுகிறாரா நாசர்? வெளியான தகவல் 1 Nassar 1](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2022/06/Nassar-1.webp?lossy=2&strip=1&webp=1)
நடிகர் நாசர் பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
நாசர் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டுள்ளார்.
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியிலும் இணைந்து பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி கமல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் நாசர் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலக நடிகர் நாசர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டார் நாசர். இதையடுத்தே சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
நடிகர் நாசர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews
You must be logged in to post a comment Login