சினிமா
மீண்டும் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போடும் சமந்தா! வெளியான புதிய அப்டேட்
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்கவுள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தில் சமந்தா மீண்டும் நடனப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா…’ என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக இருந்து வருகிறது.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுவுள்ளது. இதன் முதல் பாகத்தைப் போலவே 2-ம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தாவை கவர்ச்சி நடனமாட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இப்பாடலுக்காக அவருக்கு பெருமளவு சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#CinemaNews
You must be logged in to post a comment Login