சினிமா
30 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை – நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவு வைரல்
ரஜினி – குஷ்பு நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 திகதி வெளியான மாபெரும் வெற்றி திரைப்படமான அண்ணாமலை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இப்படம் அன்றைய காலக்கட்டத்தில்திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.
இதில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். சரத் பாபு, மனோரம்மா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில இத்திரைப்படம் இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்திருந்தார்.
இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்த குஷ்பூ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அண்ணாமலை, என் கேரியரில் மிக சிறந்த படங்களில் ஒன்று, 30 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை. ரஜினிகாந்த் சாரிடம் பணிபுரிந்தது மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உணர்கிறேன்.
மேலும், சுரேஷ்கிருஷ்ணா சாருக்கும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சாருக்கும் நான் கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Can't believe its been 30yrs to one of the most iconic movies of my career. #Annamalai
What a joy & honor it was to work with @rajinikanth sir. And I definitely owe it to #SureshKrishna sir & Iyakkunar Sigaram #KBalachander sir. Thank you for all the love ❤️🙏#30yrsofAnnamalai pic.twitter.com/dkafQhrhAB— KhushbuSundar (@khushsundar) June 27, 2022
You must be logged in to post a comment Login