சினிமா
தாய்லாந்தை விட்டு புறப்பட்ட விக்கி -நயன்!
சமீபத்தில் தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்ததும் புதுமண ஜோடி தாய்லாந்தில் தங்களது ஹனிமூனை கொண்ட சென்றிருந்தனர். அங்கிருந்து அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்
தற்போது தேன் நிலவுக்கு சென்ற நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் விடுமுறை முடித்து அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களை சிறப்பாக கவனித்த ஹோட்டல் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் ஹனிமூனை ஏற்பாடு செய்து தந்த டிராவல் ஏஜென்சி, தங்கியிருந்த ஹோட்டல், அந்த ஹோட்டலின் செப் என அனைவருக்கும் மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்துள்ளார் விக்கி. அற்புதமான சூழலுக்காகவும், சிறப்பான உணவுக்காகவும் மீண்டும் ஒரு முறை வருவோம் என மனதாரப் பாராட்டியுள்ளார்.
மேலும் ஹனிமூனை படங்களை விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You must be logged in to post a comment Login