சினிமா
ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு! காரணம் என்ன தெரியுமா?
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் இந்திய திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் கமல்ஹாசன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் முபாரக் அல் நய்னன் என்பவரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அடுத்த தலைமுறையினருக்கான சினிமா குறித்த கலந்தாய்வில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்ஹாசன் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
You must be logged in to post a comment Login